ஆர்எஸ்எஸ் நுாறாண்டு சேவையை சாத்தியமாக்கியது பாரத சமுதாயமே என்று ஆர்எஸ்எஸ் பொது செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், தனது சேவையை ஆரம்பித்து, இன்றுடன் 100 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் பொது செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே, இந்த 100 ஆண்டு பயணத்தில், சங்கத்துடன் பலர் செயல் வீரர்களாகவும், செயல் ஊக்கிகளாகவும், நண்பர்களாகவும் பயணித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சங்கத்தை ஆரம்பித்த காலத்தில், தேசபக்தி என்ற ஒற்றை உணர்வால் உந்தப்பட்ட இளைஞர்கள், போர் வீரர்கள் போல அர்ப்பணிப்புடன் நம் நாடு முழுதும் பயணத்து சேவை செய்ததாக தெரிவித்துள்ளார்.
நல்லோர் அனைவரையும் இணைத்து, நம் நாட்டை மேம்படுத்துவதற்கு நம் சங்கம் எடுக்கும் முயற்சி, மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ஆர்எஸ்எஸ் பொது செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்துள்ளார்.