போட்ஸ்வானாவில் படகு சவாரி செய்தவர்களை யானை தாக்கிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான ஒகாவாங்கோ டெல்டாவில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் யானைகள் உள்ளன. இது ஆப்பிரிக்கா கண்டத்தில் யானைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டது.
வனப்பகுதிகளாலும், வன விலங்குகளாலும் சூழ்ந்து காணப்படும் போட்ஸ்வானா சுற்றுலா துறையில் முக்கிய இடம் வகிக்கிறது. உலகின் பல்வேறு நாட்டினரும் சுற்றுலாவிற்கு போட்ஸ்வானாவிற்கே செல்கின்றனர்.
அவ்வளவு ரம்மியமிக்க போட்ஸ்வானாவின் ஒகாவாங்கோ டெல்டாவில் அமெரிக்க சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். அப்போது நீருக்குள் இறங்கிய யானை சுற்றுலா பயணிகளின் படகு நோக்கி ஓடி வந்தது.
இதைக்கண்ட படகோட்டி படகினை வேகமாக இயக்கினார். இருப்பினும் படகினை யானை தாக்கியதால் அதில் பயணித்தவர்கள் நீரில் விழுந்து தத்தளித்தனர். தொடர்ந்து அவர்களை மீட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.