பாரம்பரிய கர்பா நடனமாடிய 70 வயது தம்பதியின் காணொலி, சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கர்பா நடனம் குஜராத்தில் தோன்றிய நாட்டுப்புற நடன வகைகளில் ஒன்றாகும். இந்த நடனம் பெரும்பாலும் நவராத்திரியின்போது, தெய்வீகத்தையும், ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வகையிலும் அரங்கேற்றப்படுகிறது.
இது உலகம் முழுவதும் உள்ள குஜராத்தி மக்களால் ஆடப்படும் ஒரு மகிழ்ச்சியான நடனமாக விளங்குகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரியை ஒட்டி, 70 வயது தம்பதி, தாண்டியா நடனம் மற்றும் கர்பா நடனம் ஆடினர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.