மத்தியப் பிரதேசத்தில் 15 நாட்களில் 6 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்த விவகாரத்தில் இரண்டு இருமல் மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிந்த்வாரா மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மருத்துவர்கள் இருமல் சிரப் உள்ளிட்ட வழக்கமான மருந்துகளைப் பரிந்துரைத்தனர். அதன் பிறகு குழந்தைகள் குணமடைந்துள்ளனர்.
ஆனால் சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து 15 நாட்களில் 6 குழந்தைகளும் சிறுநீரக செயலிழப்பால் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இருமல் சிரப்பில் நச்சு இரசாயனமான டைஎதிலீன் கிளைக்கால் கலந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு இருமல் சிரப்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.