வியட்நாமை தாக்கிய புவலாய் சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
புவலாய் சூறாவளி கரையை கடந்தபோது 26 அடி உயரத்திற்கு கடல் அலை எழுந்தது. பலத்த காற்று வீசிக் கனமழை பெய்தது. இதனால் நகர் முழுவதும் வெள்ளக்காடானது.
வீடுகளைச் சுற்றி நீர் தேங்கி ஏரி போல் காட்சியளித்தது. தற்காலிக பாலங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போன நிலையில் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.