அருணாச்சலப்பிரதேசத்தின் எல்லை பகுதியில் இந்திய ராணுவம் சார்பில் நடைபெற்ற ட்ரோன் கவச் பயிற்சியில் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டளை கீழ் செயல்படும் ‘ஸ்பியர் கார்ப்ஸ்’ பிரிவு சார்பில் ட்ரோன் கவச் பயிற்சி செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது.
4 நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பங்கேற்றனர். இந்த பயிற்சியில், அடுத்த தலைமுறை ட்ரோனகளை பரிசோதித்து, போர்திறனை வெளிப்படுத்தியதாகவும், நவீன ட்ரோன் தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்-ட்ரோன் முறைகளும் சோதிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
போர்தந்திர நகர்வுகள் மற்றும் சூழல்கள், இலக்கு அடையாளம் காணுதல், இலக்குகளை முற்றிலும் செயலிழக்கச் செய்வது போன்ற நடைமுறைகள் சோதனை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
பயிற்சியில் கிடைத்த அனுபவங்கள் எதிர்கால போர் சூழலைப் புரிந்து கொள்ளவும், ட்ரோன் போர்களின் வெற்றி பெற உதவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ட்ரோன் கவச் பயிற்சி தொழில்நுட்பங்களைத் தழுவி, செயல்பாட்டு திறமையை மேம்படுத்தும் ஒரு முக்கியபடியென இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.