குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு நேர்த்திக்கடனாகப் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் கடந்த 23ஆம் தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
12 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவில் நேர்த்திக்கடனாகப் பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் நேர்த்திக்கடனாகக் காளியம்மன், ராஜா ராணி, குறவன்-குறத்தி உள்ளிட்ட வேடமணிந்து காணிக்கை வசூலில் ஈடுபட்டனர்.
சினிமா நடன கலைஞர்களும் நடனமாடி வசூலில் ஈடுபட்டதால் தசரா திருவிழா களைகட்டியது.