பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
டெல் அவிவ்-ல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், போர் நிறுத்தத்திற்கான டிரம்ப்பின் அமைதி உடன்படிக்கை மற்றும் 20 அம்ச திட்டத்திற்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், போர் நிறுத்தம் வேண்டும் என்பதே நமது நிலைப்பாடே தவிர ஒருபோதும் அதற்குத் தனிநாடு அங்கீகாரம் அளிக்கமாட்டோம் எனவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.