ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதினாலும், வியாபாரம் தொய்வாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுத பூஜை தினத்தில் தொழிலுக்கும், தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கும் பூஜை செய்து வழிபாடு நடத்தப்படும் நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலை மோதிக் காணப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் வெவ்வெறு இடங்களில் விற்கப்படுவதால் வியாபாரத்தில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்து விற்பனை செய்தால் எதிர்பார்த்ததைவிட வியாபாரம் அதிகமாக நடைபெற்றிருக்கும் எனவும் கூறியுள்ளனர்.