Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளதாக அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
Zoho நிறுவனம் மெசேஜிங் செயலியான தனது அரட்டை செயலியை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. தொடர்ந்து அந்தச் செயலி App Store-இல் இந்தியாவில் முதலிடம் பிடித்துப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி கண்ட அரட்டை செயலி, தினசரி 3 ஆயிரத்திலிருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் என்ற அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டு தொழில்நுட்ப உலகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்காக Perplexity AI நிறுவனத்தின் CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ், Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கு ஸ்ரீதர் வேம்பு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மூன்று நாட்களில் அரட்டை செயலி 100 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செயலியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.