ஈரோட்டில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமில், மருத்துவர்கள் அலட்சியமாகப் பணியாற்றியதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
காமராஜர் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கனிஷ்கா என்ற பெண் மயங்கி விழுந்தார். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில் மாற்றுத் திறனானிகளுக்கான நாற்காலிகள் இல்லையெனவும், மருத்துவர்கள் சிலர் செல்போனில் பேசிக் கொண்டு அலட்சியமாகப் பணியாற்றியதாகவும் நோயாளிகள் குற்றம்சாட்டினர்.