தமிழகத்தில் புரட்சியை உண்டாக்கும் நோக்கில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக, தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பாக ஏற்கனவே அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை மற்றும் நேபாளத்தில் நடந்த GENZ புரட்சியை ஒப்பிட்டுத் தமிழகத்திலும் அதுபோல் புரட்சி எழும் என ஆதவ் அர்ஜுனா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
பின்னர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அக்கருத்தை அவர் நீக்கிய நிலையில், அவர் மீது சென்னை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.