நவராத்திரி தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள திற்பரப்பு அருவியில் விஷேச நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில், நவராத்திரி தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
திற்பரப்பு அருவியில் சீரான நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ச்சியடைந்தனர்.
நீச்சல்குளம், சிறுவர்கள் பூங்கா ஆகிய பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.