கென்யாவில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம் கோலாகலமாக நடத்தப்பட்டது.
உலகில் குதிரைப் பந்தயம், மாட்டு வண்டி பந்தயம் போன்ற போட்டிகளும் பொழுது போக்கு, கலாச்சார திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன.
ஆனால் கென்யாவில் மொம்பசா திருவிழா, துர்கானா ஏரி விழா, லாமு கலாச்சார விழா, மௌலிடி விழா ஆகியவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுறது. அந்தவரிசையில் அங்குச் சர்வதேச ஒட்டக டெர்பி விழாவும் நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் இந்த ஒட்டக டெர்பி திருவிழாவை மக்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்றனர்.
அதன்படி, பாரம்பரிய நடனமாடிய பின் முக்கிய நிகழ்வாக ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற ஒட்டங்களின் உரிமையாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.