ஆட்சியை கலைப்பதாக மடகாஸ்கர் நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா அறிவித்துள்ளார்.
ஆப்ரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவு நாடான மடகாஸ்கர், ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.
இங்கு, 2009ல் நடந்த மக்கள் போராட்டங்களால் முன்னாள் அதிபர் மார்க் ரவலோமனானா பதவி விலகி, யங் மலகாசீஸ் டீட்டர்மைன்ட் கட்சி தலைவரான ஆண்ட்ரி ரஜோலினா ஆட்சிக்கு வந்தார்.
தற்போது ஆண்ட்ரி ரஜோலினா அரசுக்கு எதிராக, ஜென் இசட் எனப்படும் இளம் தலைமுறையினர், ஒரு வாரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து அதிபட் ரஜோலினா தன் அரசின் தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்சியைக் கலைப்பதாக அறிவித்துள்ளார்.