கோவையில் நகைப்பட்டறை ஊழியரிடம் பரிகாரம் செய்வதாகக் கூறி நூதன முறையில் 80 கிராம் தங்க நகைகளை திருடிய 3 ஈரானி கொள்ளையர்கள் மும்பையில் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் நகை பட்டறையில் பணியாற்றி வரும் ஊழியர், 80 கிராம் தங்க நகைகளை வேலைப்பாடுகளுக்காக அருகில் உள்ள கடைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது வடமாநிலத்தை சேர்ந்த சிலர், தங்களுக்கு தோஷம் உள்ளதால் பரிகாரம் செய்ய வேண்டுமென கூறி நூதன முறையில் நகைகளை திருடி உள்ளனர்.
இது தொடர்பாக நகைக்கடை ஊழியர் அளித்த புகாரின்பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பைக்கு விரைந்தனர்.
நாக்பூரில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை சுற்றி வளைத்த போலீசார், யாஷிம் அலி, குர்பானி, பாரித் ஆகியோரை கைது செய்தனர்.
கைதுச் செய்யப்பட்டவர்கள் ஈரானி கொள்ளை கும்பல் எனப் போலீசார் தெரிவித்தனர். தப்பியோடிய சலீம் அலி என்பவரை தேடும் பணி நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.