திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதால் அங்கு உள்ள சுற்றுலா தலங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
பள்ளி காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை பண்டிகை காரணமாகக் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் தூண் பாறை, குணா குகை, மோயர் சதுக்கம், பைன் மர காடுகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
இதனிடையே மூஞ்சிகள் சீனிவாசபுரம், எரிசாலை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட மலைச்சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் நிலவியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.