பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 60-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விசாயாஸ் மாகாணத்தின் செபு நகரத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்தன.
இதனால் மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறிச் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
இதனிடையே, கட்டிட இடிபாடுகளில் சிக்கி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.