உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ் தான் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பன்முகம் கொண்ட பாரத தேசத்தின் சீரிய வளர்ச்சிக்காகவும், நாட்டு மக்களின் ஒற்றுமைக்காகவும், சுதந்திரத்திற்கு முந்தைய காலந்தொட்டு பணிசெய்து வரும் ஆர்எஸ்எஸ் பேரியக்கம், நூறாண்டுகளை நிறைவு செய்வது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கமாக செயல்பட்டு வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பானது, தன்னலம் கருதாது ஆற்றி வரும் அரும்பணிகளை மென்மேலும் தொடர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.