ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பல கடினமான கால கட்டங்களை கடந்து, இன்று உலகின் மிகப்பெரிய சமூக அமைப்பாக வளர்ந்து நிற்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு காரணம் தேசத்திற்கும், சமூகத்திற்கும் செய்து வரும் அயராத சேவைதான் என்றும், தேசிய பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மேற்கொண்டு வரும் பணிகள் பெரிதும் பாராட்டுக்கு உரியவை என்றும் கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்னும் பல நூற்றாண்டுகள் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்று குறிப்பிட்ட ரங்கசாமி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சார்ந்த காரியகர்த்தாக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.