விக்கிரவாண்டி அருகே நேரிட்ட கார் விபத்தில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் ஐந்து பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சென்றபோது ஓட்டுநரின் தூக்க கலக்கம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது கார் தீப்பற்றி எரிந்ததால், காரில் பயணம் செய்த சம்சுதீன், ரிஷி, மோகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த தீபக், அப்துல் அஜீஸ் ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கார் விபத்தால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.