சிவகாசியில், கடந்தாண்டைவிட இந்தாண்டு பட்டாசு விற்பனை மந்தமாக நடைபெறுவதாக விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனினும், வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வரும் காலங்களில், பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு, பட்டாசு தொழிலுக்கென்று வாரியம் அமைக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.