கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
ஓசூர் அருகே குந்துமாரணப்பள்ளி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் உண்டியலை மதுபோதையில் உடைக்க முயன்ற சேகர் என்ற இளைஞரை பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மீண்டும் கோயில் உண்டியலை உடைக்க முயன்ற சேகரை, மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், இளைஞரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.