மகாத்மா காந்தி, பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளைக் கண்டு ஈர்க்கப்பட்டதாக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், சங்கத்தின் செயல்பாட்டில் நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடு முழுமையாக இல்லாதது ஆகியவற்றால் மகாத்மா காந்தி மிகவும் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார்.
மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கா ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளைக் கண்டு ஈர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நாக்பூரைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் முக்கிய பங்காற்றினர் என்றும்,
டாக்டர் கேசவ் பாலிராம் ஹெட்கேவர், டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆகிய இருவரும் முக்கிய பங்காற்றினர் என்றும் அவர் தெரிவித்தார்.