அகமதாபாத்தில் நடைபெறும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்திய அணி ஆதிக்கம் செலுத்து வருகிறது.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்சில் விளையாடிய அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பும்ரா, சிராஜ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
44 புள்ளி 1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்துள்ளது.