சத்தீஸ்சகரில் 103 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர்.
சரணடைந்தவர்களின் வயது 18 முதல் 40 வயது வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. சரணடைந்தவர்களின் மறுவாழ்வுக்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் நிதிஉதவி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறு சிறு தொழில் தொடங்க விரும்பினால், அதற்கான உதவிகளும் செய்து தரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.