ஜம்மு-காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் செனாப் நதி கரையை தூய்மைப்படுத்தும் பணியில் மத்திய ரிசர்வ் படை போலீசார் ஈடுபட்டனர்.
காந்தி ஜெயந்தியை ஒட்டித் தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ரம்பன் மாவட்டத்தில் உள்ள செனாப் நதிக்கரையை தூய்மைப்படுத்தும் பணிகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 84வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டனர்.
அப்போது செனாப் நதிக்கரையைில் பாறைகளின் இடுக்குகளில் சிக்கி கிடந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை சேகரித்தனர். நதி நீரின் தூய்மை மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி இந்தத் தூய்மை பணி நடைபெற்றதாக வீரர்கள் தெரிவித்தனர்.