ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து எனப் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் பட்டம் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
சில இடங்களில் மாதந்தோறும் கூடப் பட்டம் விடும் திருவிழா நடத்தப்படுகிறது. இது பொதுமக்களின் மன அழுத்தத்தை நீக்கிக் குடும்பத்தினருடன் பொழுதைக் கழிப்பதற்காக உதவுகிறது என்று கூடச் சொல்லலாம்.
அந்தவரிசையில் ஜெர்மனி நாட்டிலும் பல்வேறு நகரங்களில் ஆண்டுதோறும் பட்டம் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, தலைநகர் பெர்லினில் வெகுவிமர்சையாகப் பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது.
ஆமை, ஆக்டோபஸ், டால்பின், டிராகன், திருக்கை மீன், ஜெல்லி மீன் என பல்வேறு வடிவலான பட்டங்கள் வானை அலங்கரித்தன. இதனை ஏராளமான சுற்றுலாபயணிகள் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.