ஆஸ்திரேலிய தலைநர் கான்பெர்ராவின் அழகை பூத்து குலுங்கும் துலிப் மலர்கள் மேலும் மெருகேற்றுகின்றன.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஈரான், உக்ரைன், சைபீரியா, மங்கோலியா, சீனா ஆகிய நாடுகளில் துலிப் மலர்கள் பரவலாகக் காணப்படுகின்றன.
ஆனால், இவை ஒவ்வொரு நாட்டின் காலநிலையை பொறுத்து பூக்கும் தன்மை கொண்டவை. துலிப் மலர்கள் சிவப்பு, மஞ்சள் எனப் பல்வேறு நிறங்களில் பூத்து குலுங்கும்.
இதன் மூலம் பெரும்பாலான நாடுகள் மலர் கண்காட்சி போல் ஏற்பாடு செய்து சுற்றுலாபயணிகளை கவர்ந்து வருமானத்தை ஈட்டி வருகின்றன.
அந்தவகையில், ஆஸ்திரேலிய தலைநர் கான்பெர்ராவில் உள்ள மிகப்பெரிய தோட்டத்தில் ஆயிரக்கணக்கான துலிப் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.