புலம்பெயர்ந்த மக்கள் பிரிட்டனில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெறுவதற்கு தகுதியான கால கட்டத்தை 10 ஆண்டுகளாக உயர்த்தி பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் தங்களது குடியேற்ற கொள்கைகளைக் கடுமையாக்கி வருகின்றன. அந்தப் பட்டியலில் தற்போது பிரிட்டனும் சேர்ந்துள்ளது.
அதன்படி, பிரிட்டனுக்கு அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்தவர்கள் இனி அங்கு 10 ஆண்டுகள் தங்கி இருந்தால் மட்டுமே நிரந்தரமாக வசிக்கும் தகுதி பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அகதிகளாக வருபவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உரிமைகள் வழங்கப்படும் என்றும் பிரிட்டன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகப் பிரிட்டனுக்கு அகதிகளாக வந்தவர்கள் 5 ஆண்டுகள் அங்கு வாழ்ந்தாலே நிரந்தரமாக வசிக்கும் தகுதி பெறுவதுடன், குடும்பத்தினரையும் பிரிட்டனுக்கு அழைத்து வரும் உரிமையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.