சென்னையில் ஆளுநர் மாளிகை, முதலமைச்சரின் இல்லம் உள்ளிட்ட 5 இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் பள்ளி, கல்லூரிகள், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம், ஆளுநர் மாளிகையான ராஜ் பவன் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் முதலமைச்சர் ஸ்டாலினின் வீடு, நடிகை திரிஷாவின் இல்லம், நடிகர் எஸ்.வி.சேகரின் இல்லம் உள்ளிட்ட இடங்களிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்தனர்.
இதனையடுத்து அனைத்து இடங்களுக்கும் சென்ற போலீசார் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு சோதனை நடத்தினர்.
நீண்ட நேர சோதனைக்குப் பின் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.