உலகில் பல போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்றால், அது அமெரிக்காவுக்கே மிகப்பெரிய அவமானம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் உட்பட உலகின் பல்வேறு போர்களை நிறுத்தியதாகவும், அதற்காகத் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய அவர், காஸா – இஸ்ரேல் இடையேயான போரை நிறுத்தும் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அது நிறுத்தப்பட்டால் தான் நிறுத்திய 8வது போர் இதுவாகும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், உலகில் 8 சர்வதேச போர்களை நிறுத்தியதற்காகத் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கமாட்டார்கள் எனவும், அவர்கள் எந்த ஒரு சாதனையையும் செய்யாத வேறு ஒருவருக்கு தான் வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், தனது நாட்டுக்காகவே தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என எண்ணுவதாகவும் டிரம்ப் கூறினார்.
இதுகுறித்த வீடியோவைப் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், நோபல் பரிசுக்காக டிரம்ப் அடம்பிடித்து வருகிறார் என விமர்சித்து வருகின்றனர்.