நவராத்திரியின் நிறைவாக நாடு முழுவதும் விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதை குறிக்கும் விதமாக ஆண்டுதோறும் ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அந்த வகையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார்.
அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த ராவணன் சிலையை நோக்கித் திரவுபதி முர்மு அம்பு எய்தினார். தொடர்ந்து பிரmமாண்ட ராவணன் சிலை தகனம் செய்யப்பட்டது.
இதேபோல் ஜம்மு காஷ்மீரிலும் ராவணன் வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட ராவணனின் சிலை தீயிட்டு எரிக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ராவணன் வதநிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அங்குள்ள மைதானத்தில் பிரம்மாண்ட ராவணனின் சிலை அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தீமையை அழிக்கும் விதமாகச் சிலை தீயிட்டு எரிக்கப்பட்டது.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் ராவணன் தகனம் நிகழ்ச்சிக்காக அங்குள்ள மைதானத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தீமையை அழிக்கும் விதமாகச் சிலை தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் மத்திய பிரதேச மாநிலம் போபாலிலும் ராவணன் வதம் நிகழ்ச்சி நடைபெற்றது.