வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.