சுற்றுலாப் பயணிகளின் தொடர் வருகையால் ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சரியான நேரத்தில் ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களை பார்க்க முடியவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.