மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்து 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட இருமல் மருந்தின் மாதிரிகளை அதிகாரிகள் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருமல் மருந்து உட்கொண்ட 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் இருமல் மருந்தின் மாதிரிகளை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அப்போது சென்னையில் உள்ள கட்டாரியா பார்மாசூட்டிகல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 660 மருந்துகள் வாங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் 594 இருமல் மருந்து பாட்டில்கள் சிந்த்வாராவில் வழங்கப்பட்ட நிலையில், 16 பாட்டில்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.