எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயத்தில் சாரம் விழுந்து 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அரெர்டி நகரில் உள்ள தேவாலயத்தில், ஆண்டுதோறும் மதவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நடந்த விழாவில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.
அப்போது தேவாலயத்தில் மறுசீரமைப்புக்காகத் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சாரம் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இச்சம்பவத்தில் 36 பேர் உயிரிழந்த நிலையில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.