கொள்கைகளை உள்ளடக்கிய ஒத்துழைப்பை உருவாக்குவது மிகவும் சவாலானது என்றும் உலகளாவிய ஒத்துழைப்பு அவசியமானது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 4வது கௌடில்யா பொருளாதார மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருவதாகக் கூறினார்.
பொருளாதார தடைகள், வரிவிதிப்பு மற்றும் பிரித்தாளும் சூழ்ச்சி உள்ளிட்டவை பிற நாடுகளின் தொடர்புகளை துண்டிக்கின்றன என்று கூறிய அவர், இந்தியாவைப் பொறுத்தவரையில் பாதிப்புகள் ஏற்பட்டாலும், அதில் இருந்து மீண்டு வரும் தன்மையைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இது போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் திறன் நமக்கு அதிகரிக்கிறது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.