நாமக்கல் அருகே நோயாளியுடன் நடுவழியில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பொதுமக்கள் தள்ளிச் சென்ற சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே பாலப்பட்டியை சேர்ந்த ராணி என்ற மூதாட்டி, உடல்நலக்குறைவால் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் பழுதாகி நின்றது. இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை தள்ளு தள்ளு என தள்ளினர். எனினும் வாகனம் ஸ்டார்ட் ஆகாததால் மாற்று ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மூதாட்டியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.