புதுக்கோட்டையில் புத்தக திருவிழாவில் சினிமா பாடல்கள் ஒலிக்கப்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை நகர மன்றத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 8-வது புத்தகத் திருவிழா தொடங்கியது. அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் கலந்து கொண்டு புத்தக விழாவைத் தொடங்கி வைத்தனர்.
அரசு விழாக்களில் சினிமா பாடல்கள் ஒலிக்கக் கூடாது என்ற விதி இருந்தும், திரைப்பட பாடல்கள் ஒலிக்கப்பட்டதால் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.