மதுபான காலிபாட்டில்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியால் பணிச்சுமை அதிகரிப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கான திட்டத்தை டாஸ்மாக் கடைகள் மூலம் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மது பாட்டில் வாங்கும்போது, அதன் அதிகபட்ச சில்லறை விலையுடன் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு, காலி பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும்போது 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கபட்டது. கடந்த செப்டம்பர் 1 முதல் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலி பாட்டில் பெறும் முகமை அமைக்க வேண்டும், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோரிக்களை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.ஸ்டிக்கர் ஒட்டுவதனாலும், காலி பாட்டில்களை திரும்பிப் பெறுவதாலும் பணிச்சுமை அதிகரித்து வருவதாகவும் மேலும் எச்சில் பாட்டில்களை வாங்கும் போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாக வேதனையை தெரிவித்தனர்.