சீனாவில் நடைபெற்ற AI ரோபோ கண்காட்சியில் பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
சீனா தனது உற்பத்தித் துறையில் 20 லட்சத்திற்கும் அதிகமான தொழிற்சாலை ரோபோக்களைப் பயன்படுத்தத் தொடங்கியதன் மூலம் உலகளவில் தொழிற்சாலை ரோபோக்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த எண்ணிக்கை, உலகில் உள்ள மற்ற அனைத்து தொழில்துறை ரோபோக்களின் மொத்த எண்ணிக்கையையும் விட அதிகமாகும். இது, பிற தொழில்துறை நாடுகளை விடவும், சீனா தனது உற்பத்தியை எத்தகைய வேகத்தில் கூட்டியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
2024ஆம் ஆண்டில் மட்டும் சீனத் தொழிற்சாலைகள் கிட்டத்தட்ட 3 லட்சம் புதிய ரோபோக்களை நிறுவியுள்ளன. அதே சமயம் அமெரிக்கா வெறும் 34 ஆயிரம் ரோபோக்களை மட்டுமே சேர்த்துள்ளது.
இந்த நிலையில், ஷென்செனில் 2025-ம் ஆண்டுக்கான AI ரோபோ கண்காட்சி நடைபெற்றது. இதனைக் காண ஏராளமான பார்வையாளர்கள் ஆச்சரியத்துடன் குவிந்தனர்.
ரோபோக்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை பற்றிப் பார்த்தும், ஆர்வமுடன் கேட்டும் அவர்கள் அறிந்து கொண்டனர்.