கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததில் வீடு ஒன்றில் இருந்த அனைத்து மின்சாதன பொருட்களும் சேதமடைந்தன.
சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் சிவசக்தி நகரில் வசித்து வரும் நதியா என்பவரின் வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் இடிவிழுந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது வீட்டில் இருந்த மின்விசிறி உள்ளிட்ட அனைத்து மின்சாதனப் பொருட்களும் வெடித்து சிதறியதுடன், நதியாவின் மகன் அகிலன் என்பவருக்குக் காயம் ஏற்பட்டது.
அப்போது வீட்டிலிருந்து அனைவரும் வெளியேறிய நிலையில் அகிலனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.