இஸ்ரேல் அரசு நிகழ்ச்சியில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இஸ்ரேலில் ஓட்டமன் சாம்ராஜ்யத்தில் இருந்து விடுதலை கிடைத்த ஹைஃபா போரின் 107 ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இதில் இஸ்ரேலுக்கான இந்தியத் தூதர் ஜே.பி.சிங், அந்நாட்டு ராணுவ பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் இஸ்ரேலிய போலீசார், இந்திய தேசிய கீதத்தை இசைக்கச் செய்தனர்.
இந்த வீடியோவை இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நிலையில் பலரும் அதை வைரலாக்கி வருகின்றனர்.