கன்னியாகுமரி மாவட்டம் குறுமத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த மானிய விலை உரங்கள் லாரியில் கடத்தப்பட்ட காட்சி வெளியாகி உள்ளது.
இந்த அலுவலகத்தில் மானிய விலை உரங்களை வழங்குவதில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லையெனவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அரசின் மானிய உரங்களை கடத்திய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.