டிரம்ப்பின் அமைதி திட்டத்தின்படி இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளது.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா அதிபர் டிரம்ப் 20 அம்ச திட்டங்களை முன்மொழிந்தார்.
இந்தத் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசித்து வந்த ஹமாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயிருடன் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்த கைதிகளின் உடல்களையும் திரும்ப ஒப்படைக்க சம்மதிப்பதாகத் தெரிவித்துள்ளது.