கனடாவில் திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்த தெற்காசிய திரைப்படங்கள், தீ வைப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் எதிரொலியாக நீக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒன்டாரியோ மாகாணத்தின் ஓக்வில் நகரில் அமைந்துள்ள திரையரங்கில் இந்திய திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்குச் சென்ற மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், தீ வைத்துத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது. வன்முறை சம்பவங்களை தொடர்ந்து, தெற்காசிய திரைப்படங்களைத் திரையிடுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகத் திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த முடிவு கனடாவில் உள்ள இந்திய திரை ரசிகர்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.