இமாச்சல பிரதேசத்தில் போரில் உயிரிழந்த ராணுவ வீரரின் சகோதரி திருமணத்தில் சகோதரன் ஸ்தானத்தில் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆஷிஷ் குமார் என்ற ராணுவ வீரர் கடந்தாண்டு பிப்ரவரியில் அருணாச்சலப் பிரதேசத்தில் ஆப்ரேஷன் அல்ரட்டின் என்ற ராணுவ நடவடிக்கையின் போது வீரமரணமடைந்தார்.
இந்நிலையில் அவரது சகோதரி ஆராதனாவுக்கு இமாச்சல பிரதேசத்தின் சிர்மவுர் மாவட்டத்தில் உள்ள பர்லி என்ற கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.
இதில் ஆஷிஷ் குமாருடன் பணியாற்றிய சக ராணுவ வீரர்கள் அவரது ஸ்தானத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது சீருடையில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள் சகோதரன் என்ற ஸ்தானத்தில் ஆராதனாவுக்கு செய்ய வேண்டிய திருமண சடங்குகளை செய்தனர்.
இந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.