நாமக்கல்லில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகளுக்குச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே அதிமுக சார்பில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் பிரச்சாரம் செய்வதற்காக அதிமுகவினர் காவல்துறையில் அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
அதில் திருச்செங்கோடு பகுதியில் அண்ணா சிலை, குமாரபாளையம் பகுதியில் ராஜன் திரையரங்கு உள்ளிட்ட இடங்களைத் தேர்வு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால் அனுமதி வழங்க மறுத்த காவல்துறை அதிமுக தேர்வு செய்த இடங்கள் அனைத்து நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி எனவும், அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
இதற்கிடையே பட்டா இடங்களைத் தேர்வு செய்து 3 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ளும் அளவிற்கு பிரச்சார கூட்டத்தை நடத்த காவல்துறை அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.