சீனாவில் நடைபெற்ற டிரோன் சாகத்தில் குளறுபடி காரணமாகத் தீப்பொறிகள் மழைபோல் பொழிந்ததால் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.
ஹுனான் மாகாணத்தின் லியுயாங்கில் நகரில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றனர். சர்வதேச பட்டாசு கலாச்சார விழாக்கள் மற்றும் பட்டாசு போட்டிகள் இங்கு நடத்த பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இங்கு ட்ரோன்களை கொண்டு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதனை காண ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது ட்ரோன்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தீப்பொறிகள் நெருப்ப மழை போல் பொழிந்ததால் பார்வையாளர்கள் செய்வதறியாது ஓட்டம் பிடித்தனர்.
இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சில நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மழைபோல் தீப்பொறிகள் பொழிந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.